கோவையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டனர்


கோவையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டனர்
x
தினத்தந்தி 12 May 2022 7:10 PM IST (Updated: 12 May 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டனர்


கோவை

கோவையில் உக்கடம், அவினாசிரோடு, மேட்டுப்பாளையம் ரோடு பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதனால் அந்த சாலைகளில் பொருட்கள் போடப் பட்டு குறுகலாக இருந்தாலும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 

இதுதவிர திருச்சிரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில் மேம்பால பணிகள் முடிந்தும் இன்னும் திறக்கப்பட வில்லை. 

இந்த நிலையில் நேற்று சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அவினாசி ரோடு, திருச்சி ரோடு, லங்கா கார்னர், மில்ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இதனால் வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

எனவே கோவை நகரில் சாலைகளை அகலப்படுத்த வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை பயன்பாட்டுக்கு திறப்பது உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story