சொத்து வரியை மறுசீராய்வு செய்வ தற்கு வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய 100 குழுக்கள் அமைக்கப்பட்டு 44 கோடி வரி பாக்கியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது
சொத்து வரியை மறுசீராய்வு செய்வ தற்கு வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய 100 குழுக்கள் அமைக்கப்பட்டு 44 கோடி வரி பாக்கியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது
கோவை
சொத்து வரியை மறுசீராய்வு செய்வ தற்கு வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய 100 குழுக்கள் அமைக்கப்பட்டு, ரூ.44 கோடி வரி பாக்கியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சொத்து வரி
கோவை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 5 லட்சத்து 45 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளன. இவற்றுக்கான சொத்து வரி 5 மண்டல அலுவலகங்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது.
2021-ம் ஆண்டில் சொத்துவரியாக மொத்தம் ரூ.364 கோடி வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் ரூ.213 கோடி மட்டும் வசூலானது. ரூ.160 கோடி இன்னும் வசூலிக்கப்படாமல் உள்ளது.
ரூ.44 கோடி வரி பாக்கி
இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மொத்தம் ரூ.44 கோடிக்கும் மேல் சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்து உள்ளனர்.
வரி தொடர்பாக சில நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்த வரி பாக்கி வைத்து இருப்பவர்களிடம் வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதற்காக அவர்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.160 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100 குழுக்கள்
மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று சொத்து வரி மறுசீராய்வு செய்ய 100 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இடம்பெற்று உள்ளனர்.
அவர்கள் ஒவ்வொரு கட்டிடமாக சென்று பழைய கட்டிடங்களில் கூடுத லாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதா? அந்த கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்வார்கள்.
வரி நிர்ணயம் செய்யப்படா விட்டால் வரி நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள்.
இதன் மூலம் கூடுதல் வருவாய் மாநகராட்சிக்கு கிடைக்கும். சுயமதிப்பீட்டுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்பின்னர் ஒவ்வொரு கட்டிடங்களின் மீதான சொத்து வரி விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story