பீட் அருகே பயங்கர விபத்தில் கார் 60 அடி பள்ளத்தில் விழுந்தது- 4 பேர் பலி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 12 May 2022 7:24 PM IST (Updated: 12 May 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

பீட் அருகே 60 அடி பள்ளத்தாக்கில் கார் விழுந்த விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.

பீட், 
  பீட் அருகே 60 அடி பள்ளத்தாக்கில் கார் விழுந்த விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
பள்ளத்தாக்கில் விழுந்த கார்
  பீட் நகரை சேர்ந்தவர் சதீஷ் டேக்வானி(வயது 58). இவரது  சகோதரர்கள் சுனில்(48), சங்கர்(46). இவர்கள் உறவினர் லக்கன்(20) மற்றும் இன்னொரு உறவினருடன் அகமது நகர் மாவட்டத்திற்கு காரில் பயணம் செய்தனர். இரவு 8.30 மணி அளவில் ஆஷ்டி தாலுகா மாசோபா வாடி பாட்டா அருகே வந்தபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. 
  இதனால் தறிகெட்டு ஓடிய கார், சாலையோரமாக இருந்த 60 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. 
4 பேர் பலி
  இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு பேராடினர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதில் இருந்த 3 சகோதரர்கள், அவர்களது உறவினர் லக்கன் என 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
  மேலும், 4 பேரை பலிகொண்ட கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. 
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----

Next Story