அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானை


அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானை
x
தினத்தந்தி 12 May 2022 8:15 PM IST (Updated: 12 May 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-கோழிக்கோடு சாலையில் அரசு பஸ்சை காட்டுயானை வழிமறித்தது.

கூடலூர்

கூடலூர்-கோழிக்கோடு சாலையில் அரசு பஸ்சை காட்டுயானை வழிமறித்தது.

காட்டுயானை முகாம்

கூடலூர் பகுதியில் கோடை வறட்சியால் வனப்பகுதியை விட்டு காட்டுயானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. தற்போது தொடர்ந்து மழை பெய்வதால் வனம் பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் காட்டுயானைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கி உள்ளது. ஆனால் பலாப்பழ சீசன் தொடங்கி விட்டதால் காட்டுயானைகள் ஊருக்குள் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. அவை வீடுகளை முற்றுகையிட்டு சேதப்படுத்தி வருவதோடு சாலையில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகிறது.  

இந்த நிலையில் நேற்று  கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நெலாக்கோட்டை என்ற இடத்தில் காட்டுயானை முகாமிட்டு இருந்தது. அப்போது கூடலூரில் இருந்து பயணிகளுடன் அரசு பஸ் பிதிர்காடு நோக்கி சென்றது. 

பஸ்சை வழி மறித்தது

இரவு 9 மணியளவில் அந்த பஸ்சை காட்டு யானை வழிமறித்தது. தொடர்ந்து சாலையின் நடுவில் நின்றிருந்தது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் காட்டு யானை அரசு பஸ்சை நோக்கி நடந்து வந்தது. இதனால் டிரைவர் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சுமார் 50 மீட்டர் தூரம் பஸ்சை நோக்கி காட்டு யானை வந்தது. 

தொடர்ந்து பஸ்சின் அருகே வந்து, சாலையோரம் சென்றது. ஆனால் யாரையும் தாக்கவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். தொடர்ந்து டிரைவர் பஸ்சை வேகமாக அங்கிருந்து ஓட்டிச்சென்றார். இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது.


Next Story