கேழ்வரகு கூழ் சாப்பிட்டதால் வாந்தி-மயக்கம் பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
முத்துப்பேட்டை அருகே கேழ்வரகு கூழ் சாப்பிட்ட பள்ளி மாணவிக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை:-

பள்ளி மாணவி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை அம்பட்டான்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய 2-வது மகள் அமிர்தா(வயது 14). இவர், கல்லடிக்கொல்லை அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அமிர்தா கடந்த 5-ந் தேதி இரவு கேழ்வரகு கூழ் சாப்பிட்டார். அப்போது அவருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அமிர்தா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story