மூதாட்டி பலியான வழக்கில் 2 பேர் கைது


மூதாட்டி பலியான வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2022 8:28 PM IST (Updated: 12 May 2022 8:28 PM IST)
t-max-icont-min-icon

லத்தேரி அருகே மூதாட்டி பலியான வழக்கில் அவருடைய உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கே.வி.குப்பம்

லத்தேரி அடுத்த பனமடங்கியை சேர்ந்தவர் அசோக்குமாரி (வயது 75). இவரது உறவினர்கள் வீட்டின் பழைய சுவரை இடித்தனர். இதை அசோக்குமாரி தடுத்தபோது அவர் மீது கல் விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவுசெய்து மூதாட்டியின் உறவினர்களான முரளி (43),  சீனிவாசன் (46) ஆகியோரை கைதுசெய்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story