வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2022 8:43 PM IST (Updated: 12 May 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த வாணியன் குளம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 41). இவர் கடந்த 8-ந்தேதி பிராஞ்சேரி, பஸ்நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது தச்சநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமண பெருமாள் (21) என்பவர் வந்தார். அவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் வாங்க வேண்டும் என்று கூறி யோகேஷ்வரனுடைய மோட்டார் சைக்கிளில் ஏறி தருவையில் உள்ள மறுவாழ்வு மையம் அருகே அழைத்து சென்றுள்ளார்.

அங்கு நின்றிருந்த லட்சுமண பெருமாளின் கூட்டாளிகளான தச்சநல்லூர், நடுத்தெருவைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் (26), தருவையை சேர்ந்த அய்யப்பன் (36) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அரிவாளை காட்டி மிரட்டி யோகேஸ்வரனிடம் இருந்து ரூ.500 மற்றும் செல்போனை பறித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமண பெருமாள், ராமசுப்பிரமணியன், அய்யப்பன் மற்றும் சிறுவனை நேற்று கைது செய்தனர்.

Next Story