அறுவடைக்கு தயாரான கரும்புகளை தீ வைத்து எரித்துவிட்டு விவசாயி தற்கொலை


விவசாயி தூக்கிட்டு தற்கொலை
x
விவசாயி தூக்கிட்டு தற்கொலை
தினத்தந்தி 12 May 2022 8:45 PM IST (Updated: 12 May 2022 8:45 PM IST)
t-max-icont-min-icon

அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகளை தீவைத்து எரித்துவிட்டு, விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் பீட் மாவட்டத்தில் நடந்துள்ளது.

மும்பை, 
  அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகளை தீவைத்து எரித்துவிட்டு, விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் பீட் மாவட்டத்தில் நடந்துள்ளது. 
தொடரும் தற்கொலை
  மராட்டியத்தில் பீட் மாவட்டம் விவசாயிகள் தற்கொலை களமாக உள்ளது. ஆட்சிகள் மாறினாலும் இந்த பகுதியில் காட்சிகள் மாறாமல்  விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.
  இந்நிலையில் மேலும் ஒரு சம்பவமாக, விளைவித்த பயிர்களை எரித்துவிட்டு விவசாயி ஒருவர் உயிரை மாய்த்து கொண்ட சோக சம்பவம் இங்கு நடைபெற்றுள்ளது. 
  பீட் மாவட்டம் ஜியோராய் தாலுகாவிற்கு உட்பட்ட ஹிங்கன்கான் கிராமத்தை சேர்ந்தவர் நாம்தேவ் ஆத்மராம் ஜாதவ்(வயது 32). இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விளைநிலத்தில், கரும்பு பயிரிட்டு இருந்தார். 
பயிருக்கு தீ
  இந்நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணியளவில், தனது வயலுக்கு வந்த விவசாயி அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகளை தீயிட்டு கொளுத்தினார். 
  பின்னர் தனது வீட்டின் அருகே வசிக்கும் உறவினருக்கு போன் செய்து, விளைந்திருந்த கரும்பு பயிரை சரியான நேரத்தில் அறுவடை செய்து சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல முடியாததால், பெரும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாகவும், இதனால் தான் தற்கொலை செய்ய போவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்துவிட்டார். 
  இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் அவரை காப்பாற்ற விவசாய நிலத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் நாம்தேவ் ஜாதவ் நைலான் கயிற்றால் அங்கிருந்த வேப்ப மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். 
  இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
-----

Next Story