சிவனடியார்கள் போலீசில் புகார்
நடராஜ பெருமானின் நடனம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கம்பம் போலீஸ் நிலையத்தில் சிவனடியார்கள் புகார் கொடுத்தனர்.
கம்பம்:
உலக சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு சிவனடியார்கள் நேற்று மாலை வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், இந்துக்கள் பெரிதும் வணங்கக்கூடிய தில்லை நடராஜப்பெருமானின் நடனத்தை கொச்சைப்படுத்தும் விதமாக யூடியூப்பில் பதிவு செய்த நபரை கைது செய்ய வேண்டும்.
சர்சைக்குரிய யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. திடீரென சிவனடியார்கள், போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story