செட்டியக்காபாளையம் பால தண்டாயுதபாணி கோவிலில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம்
செட்டியக்காபாளையம் பால தண்டாயுதபாணி கோவிலில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம்
நெகமம்
நெகமம் அடுத்த செட்டியக்காபாளையம் கிராமத்தில் இருந்து ஆண்டு தோறும் பழனிக்கு காவடிகள் எடுத்து பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் செட்டியக்காபாளையம் பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து வைரவிழா கண்ட பழனி பாதயாத்திரை காவடிகள் புறப்பட்டது. முன்னதாக கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து, கோவிலை வலம் வந்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் காவடிகள் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பஸ் நிலையம், பட்டத்தரசி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் காவடியுடன் பக்தர்கள் ஆடி மகிழ்ந்தனர். பின் பட்டத்தரசி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் 15-க்கும் மேற்பட்ட காவடிகள், 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து செல்கின்றனர். இவர்கள் வருகிற 16-ந்தேதி அதிகாலை பழனியில் கிரிவலம் சென்று பின் மலைக்கு சென்று அபிஷேகபூஜை செய்து முருகனை வழிபாடு செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story