லாரி மோதி தொழிலாளி பலி
நெல்லையில் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). இவர் காங்கிரீட் கட்டிடங்களை உடைக்கும் எந்திரம் வைத்து கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 1 வாரமாக பாளையங்கோட்டையில் ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று அதிகாலை வேலை முடிந்து பாளையங்கோட்டையில் இருந்து வீட்டுக்கு ஆறுமுகம் மொபட்டில் திரும்பி கொண்டிருந்தார்.
வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, சுரண்டையில் இருந்து மூலைக்கரைப்பட்டிக்கு பால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி, ஆறுமுகம் மொபட் மீது மோதி, அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் ஆறுமுகம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செ்யது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story