முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாரி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அருமுத்துவள்ளியப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் எழிலன் வரவேற்றார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்லையா, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் திலகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பிரசார செயலாளர் ஏழுமலை, மாவட்ட தலைவர் பீட்டர், செயலாளர் மரியஆரோக்கியதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், மதுரைவீரன், ராமர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் கல்வி மாவட்ட தலைவர் ஆனந்த் நன்றி கூறினார்.

Next Story