மணல் கடத்தல்; 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்தல்; 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 May 2022 9:43 PM IST (Updated: 12 May 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருக்கோவிலூர், 
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் போலீசார் டி.தேவனூரில் துரிஞ்சல் ஆற்று பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் மணல் கடத்தி கொண்டிருந்ததை  போலீசார் பார்த்தனர். இதையடுத்து மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பழனிவேல், ஏழுமலை ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் வசந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story