முதியவருக்கு இதயத்தில் 2 பேஸ்மேக்கர் கருவி பொருத்தி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்


முதியவருக்கு இதயத்தில் 2 பேஸ்மேக்கர் கருவி பொருத்தி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்
x
தினத்தந்தி 12 May 2022 9:46 PM IST (Updated: 12 May 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

முதியவருக்கு இதயத்தில் 2 பேஸ்மேக்கர் கருவி பொருத்தி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்

கோவை, மே.13-
முதியவருக்கு இதயத்தில் 2 பேஸ்மேக்கர் கருவி பொருத்தி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

இதய பாதிப்பு

கோவையை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 60). இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இதயபாதிப்பு தொடர்பாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக  வந்தார். 

அவரை உள்நோயாளியாக அனுமதித்து இதயவியல் துறை டாக்டர்கள்    பல்வேறு கட்ட சோதனைகளை செய்தனர்.

அதில் அவருக்கு இதயத்தில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டு இதயத்துடிப்பு திறன் குறைவாக இருப்பது தெரியவந்தது. 

எனவே அவருக்கு இதயத்தில் 2 பேஸ்மேக்கர் கருவி (செயற்கை இதய துடிப்பு கருவி) பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.

2 பேஸ்மேக்கர்

அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், முருகானந்தத் துக்கு 2 பேஸ்மேக்கர் கருவி பொருத்தி சாதனை படைத்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார்.  

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதயத்தில் 2 பேஸ்மேக்கர் கருவி பொருத்தப் பட்டது இதுவே முதல்முறை ஆகும். எனவே டாக்டர்கள் மற்றும் குழுவினருக்கு டீன் நிர்மலா பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து டீன் நிர்மலா கூறியதாவது

டாக்டர்கள் சாதனை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முருகானந்தத் திற்கு இதய துடிப்பு 40 வரை மட்டுமே இருந்தது. எனவே அவருக்கு 2 பேஸ்மேக்கர் கருவி பொருத்த முடிவு செய்யப்பட ்டது. 

அதன்படி வலது வெண்ட்ரிக்கல் மற்றும் வலது ஏட்ரியம் ஆகிய 2 அறைகளிலும் பேஸ்மேக்கர் கருவியை டாக்டர்கள் குழுவினர் வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்தனர். 

இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால் கோவை அரசு ஆஸ்பத்திரி யில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது.  

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story