சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டால் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் கலெக்டர் மோகன் அறிவுரை


சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டால் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் கலெக்டர் மோகன் அறிவுரை
x
தினத்தந்தி 12 May 2022 9:55 PM IST (Updated: 12 May 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

சேவை மனப்பான்மையுடன் திட்டமிட்டு செயல்பட்டால் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும் என்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பட்டா மாறுதல் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இணையவழி பட்டா மாறுதல் தொடர்பாக உட்பிரிவுகள் செய்து பட்டா வழங்கக்கோரும் மனுக்கள் தீர்வு செய்யப்பட உள்ளது. இதற்காக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களையும் இணைத்து அவர்களுக்கு பயிற்சி வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் தாலுகாவில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நடைபயிற்சி பூங்காவில் தொடங்கியது. இதற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆனந்தகுமார், மண்டல துணை தாசில்தார்கள் லட்சாதிபதி, குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளர் முத்துக்குமரன், நகர சார் ஆய்வாளர் அரங்கநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் சர்வே சட்டங்களின் விதிகள், புலத்தணிக்கை, உட்பிரிவு கோப்புகளை தயாரித்தல், புலப்படம் வரைதல், நில அளவை குறித்த கருவிகளை எவ்வாறு பயன்படுத்துதல், நிலத்தின் பரப்பை கணித முறையில் கணித்தல், பட்டா வகைப்பாடுகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

கலெக்டர் அறிவுரை

இப்பயிற்சியை மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் மோகன் கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர்கள் யார் சொல்லுக்கும், எந்த நிர்பந்தத்திற்கும் ஆளாகாமல் உரிய பயிற்சியாலும், உரிய ஆவணங்களின் அடிப்படையிலும் பொதுமக்களுக்கான தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செயல்படும்போது அலுவலகத்தில் கோரிக்கை குறித்த மனுக்கள் நிலுவையில் இருக்காது. நாள்தோறும் பணிகளை மேற்கொள்ளும்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற முடியும். எனவே பயிற்சியை நல்ல முறையில் கற்றுக்கொண்டு மக்களின் தேவையே எங்களின் சேவை என்ற நிலைப்பாட்டுடன் செயல்படுங்கள். சேவை மனப்பான்மையுடன் திட்டமிட்டு செயல்பட்டால் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story