திண்டிவனத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
திண்டிவனத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் அருவி போல கொட்டியது.
திண்டிவனம்,
திண்டிவனம் நகர பகுதிக்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ராட்சத குழாய்கள் மூலம் திண்டிவனம் நகர பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திண்டிவனம் இந்திராகாந்தி பழைய பஸ் நிலையம் அருகில் மயிலம், விழுப்புரம் நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியில் இருந்த தரைப்பாலம் கடந்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து அங்கு தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தரைப்பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் சென்று வந்ததால், நேற்று முன்தினம் கண்டரக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் அருவி போல் தண்ணீர் கொட்டியதுடன் சாலையில் வீணாக ஓடியது.
வாகன ஓட்டிகள் அவதி
மேலும் வாகனங்கள் மீதும், தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள வால்வை மூடினர். தொடர்ந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாாிகள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story