சின்னசேலத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும்


சின்னசேலத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 May 2022 10:02 PM IST (Updated: 12 May 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னசேலம், 

சின்னசேலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் கடந்த 2012-.ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சின்னசேலம் வட்டத்தில் சின்னசேலம், கச்சிராயப்பாளையம், கீழ்குப்பம் ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக போலீசார்  நீண்ட தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி நீதிமன்றதுக்கு கோப்புகளை எடுத்து சென்று வருகின்றனர். இதை தவிர்க்க சின்னசேலத்தில் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட விக்கிரவாண்டி தாலுகாவில் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சின்னசேலம் தாலுகா அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆனபின்பும் இங்கு நீதிமன்றம் அமைக்கப்படவில்லை. வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்கு பொதுமக்கள் ஏராளமானவர்கள் கள்ளக்குறிச்சிக்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பெரும் செலவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க சின்னசேலத்தில் தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story