பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 12 May 2022 10:02 PM IST (Updated: 12 May 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு வென உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

ஆரல்வாய்மொழி:
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது. 
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு வெளி மாநிலத்தில் இருந்தும், கொடைக்கானல், ஊட்டி, சேலம், திண்டுக்கல், மதுரை, வாடிப்பட்டி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் குமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு, ஆவரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
அவ்வாறு வரும் பூக்களை வாங்க குமரி மாவட்டத்தில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள். மேலும் வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிச்சி ரூ.2 ஆயிரத்துக்கு...
இந்தநிலையில் நேற்று முன்தினம் கிலோ ரூ.1,250-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.750 உயர்ந்து ரூ.2,000-க்கு விற்பனையானது. இதேபோல், ரூ.1000-க்கு விற்பனையான முல்லை ரூ.500 உயர்ந்து ரூ.1500-க்கும் விற்பனையானது. 
இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறுகையில், சூறைக்காற்று காரணமாக பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று பிச்சிப்பூ வரத்து குறைவாக இருந்தது. மேலும் சித்திரை கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது என்றார். 
விலை விவரம்
தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளி ரூ.140, மல்லி ரூ.500, சம்பங்கி ரூ.100, கனகாம்பரம் ரூ.750, வாடாமல்லி ரூ.70, துளசி ரூ.30, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.5, கோழிப்பூ ரூ.60, பச்சை (ஒரு கட்டு) ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.120, ஸ்ெடம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.300, மஞ்சள் கிரேந்தி ரூ.60, சிவப்பு கிரேந்தி ரூ.70, சிவந்தி மஞ்சள் ரூ.250, சிவந்தி வெள்ளை ரூ.400, கொழுந்து ரூ.80, மரிக்கொழுந்து ரூ.100 என விற்பனையானது.

Next Story