நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பனங்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் அமுதா, தனி தாசில்தார் முத்து முருகேசபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 17 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 8 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள், இலவச தையல் எந்திரம் உள்பட ரூ.8 லட்சத்து 79 ஆயிரத்து 868 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் மண்டல துணை தாசில்தார் யசோதா, திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story