மக்கள் நேர்காணல் முகாம்


மக்கள் நேர்காணல் முகாம்
x
தினத்தந்தி 13 May 2022 12:00 AM IST (Updated: 12 May 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

பிராந்தியங்கரை ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை ஊராட்சியில் அரசின் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு  மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி   326 பேருக்கு  ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்பில்  நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். கோட்டாட்சியர் துரைமுருகன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, ஊராட்சி தலைவர் கஸ்தூரி, மாவட்ட கவுன்சிலர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக அரசு சார்பில் மருத்துவம், விவசாயம், கல்வி உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை கலெக்டர் பார்வையிட்டார். இதில்  வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி, ஒன்றிய ஆணையர் அண்ணாதுரை, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் திவ்யா வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர்ராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு  முருகவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  முடிவில் தாசில்தார் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story