குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு
குளத்தில் மூழ்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
அழகியபாண்டியபுரம்:
திருவனந்தபுரம் சங்குமுகம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 55). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அழகியபாண்டியபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ள பெரியகுளத்தில் வினோத் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
குளத்தில் குளிக்க சென்ற போது வினோத் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story