வெடிக்காத பட்டாசுகளை வெடிக்க வைத்த 4 மாணவர்கள் படுகாயம்


வெடிக்காத பட்டாசுகளை வெடிக்க வைத்த 4 மாணவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 12 May 2022 10:11 PM IST (Updated: 12 May 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழாவில் வாணவேடிக்கையில் வெடிக்காமல் இருந்த பட்டாசுகளை வெடிக்க வைத்த 4 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்
 
திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழாவில் வாணவேடிக்கையில் வெடிக்காமல் இருந்த பட்டாசுகளை வெடிக்க வைத்த 4 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

வெடிக்காத பட்டாசுகள்

திருப்பத்தூர் மாவட்டம் ப.முத்தம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கருணாமூர்த்தி. இவரது மகன் கார்த்திக் (வயது 11) மற்றும் அன்பு மகன் உமேஸ்வரன் (11), ராஜ்குமார் மகன் யவன் (11), குருநாதன் மகன் ஹரிஷ் (8) ஆகிய 4 பேரும் முத்தம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பினர். அப்போது ப‌.முத்தம்பட்டி பகுதியில்  கோவில் திருவிழாவில் நடந்த வாணவேடிக்கையில் மழையின் காரணமாக சில பட்டாசுகள் வெடிக்காமல் கிடந்துள்ளது.

4 மாணவர்கள் காயம்

இதை பார்த்த 4 மாணவர்களும் அந்த பட்டாசுகளை ஒரே இடத்தில் வைத்து வெடிக்கவைப்பதற்காக தீ வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பட்டாசுகள் வெடித்தது. இதில் 4 மாணவர்களும் படுகாயமடைந்தனர். 

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாணவர்களை அனுப்பி வைத்தனர். அவர்களில் கார்த்திக் என்ற மாணவனை மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மற்ற 3 மாணவர்களையும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story