67 அடி உயர தேரை தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்
முடியனூர் திரவுபதிஅம்மன் கோவில் திருவிழாவில் 67 அடி உயர தேரை தோளில் பக்தர்கள் சுமந்து சென்றனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே முடியனூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறபபு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூங்கில்மரங்களை கொண்டு 6 அடுக்குகளாக அமைக்கப்பட்ட 67 அடி உயரம் கொண்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் அந்த தேரை தங்களது தோள்களில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தனர். இந்த தேரை முடியனூரை சேர்ந்த கண்ணன், சாமிதுரை, செல்வம் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் சுப்பு. இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோமுகி மணியன் உள்பட திரளான பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர்திருவிழா இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story