கீழ்வேளூர் பகுதியில் பலத்த மழை
கீழ்வேளூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
சிக்கல்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் கீழ்வேளூர் பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. மாலை 4.30 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதேபோல தேவூர், ராதாமங்கலம், வெண்மணி, இருக்கை, அய்யடிமங்கலம், வண்டலூர், இறையான்குடி, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, 105 மணலூர், கூரத்தான்குடி, வலிவலம், சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story