ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?
நாகூர் அருகே வைரன் இருப்பு மெயின் சாலையில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
நாகூர்:
நாகூர் அருகே வைரன் இருப்பு மெயின் சாலையில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஆபத்தான வளைவு
நாகை மாவட்டம் மேலநாகூரை அடுத்த வைரன் இருப்பில் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலை வழியாக நாகூர் கிழக்கு சாலையில் இருந்து பாலக்காடு, பெருங்கடம்பனூர், ஆழியூர் வழியாக திருவாரூருக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது.
இதைப்போல திருவாரூர் இருந்து நாகூருக்கு இந்த சாலையில் அதிக அளவில் பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். வைரன் இருப்பில் முக்கிய சாலையில் கோவில் அருகில் ஆபத்தான வளைவு உள்ளது.
விபத்துகள்
இந்த வளைவில் இருமுனையில் எதிரே வரும் வாகனமும் தெரியாமல் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த சாலை முக்கிய சாலை என்பதால் வாகனங்கள் அதிக அளவில் வேகமாக வருகிறது.. இந்த ஆபத்தான வளைவில் வாகனங்களில் வருபவர்கள் வேகமாக வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். இரவு நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் வருவதால் வளைவுகள் தெரியாமல் நேருக்கு நேர் மோதி விபத்துகள் ஏற்படுகிறது.
வேகத்தடை அமைக்க கோரிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விபத்துகள் நடைபெறாமல் தடுக்க ஆபத்தான வளைவில் வேதத்தடை அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story