பயனாளிகளுக்கு ரூ.6¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


பயனாளிகளுக்கு ரூ.6¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 13 May 2022 12:00 AM IST (Updated: 12 May 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

பயனாளிகளுக்கு ரூ.6¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் ஆய்மூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயசித்ராகலா தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி விஜயராகவன் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வி சேவியர், ரம்யா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருக்குவளை தாசில்தார் ராஜ்குமார், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் கார்த்திகேயன், தலைஞாயிறு ஒன்றிய குழுத்தலைவர் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் மகேந்திரன் நன்றி கூறினார்.


Next Story