இளம்பெண்ணின் மீது திராவக வீசிய தமிழக வாலிபர் பற்றி புதிய தகவல்
இளம்பெண்ணின் மீது திராவக வீசிய தமிழக வாலிபர் பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது
பெங்களூரு :
பெங்களூரு ஹெக்கனகட்டே கிராசில் வசித்து வரும் இளம்பெண் மீது காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் நாகேஷ் (வயது 26) என்பவர் திராவகம் வீசி இருந்தார். தற்போது தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் நாகேசை பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த நாகேஷ் அங்கு ஒரு பெண்ணுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதாவது நாகேஷ் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் கோடியாளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நாகேஷ் பெங்களூருவுக்கு வந்து திராவகம் வீச்சுக்கு பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெரியம்மா வீட்டில் வாடகைக்கு இருந்து உள்ளார்.
அப்போது இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்ததால், நாகேசை அந்த வீட்டில் இருந்து இளம்பெண்ணின் பெரியம்மா அனுப்பி இருந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற நாகேஷ் அங்கு ஒரு பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் போலீசாரிடம் கூறினார். ஆனால் நாகேஷ் மீது புகார் எதுவும் அளிக்கவில்லை. இதனால் நாகேசை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதன்பின்னர் பெங்களூருவுக்கு மீண்டும் வந்த நாகேஷ், இளம்பெண் மீது திராவகம் வீசியது தெரியவந்து உள்ளது.
Related Tags :
Next Story