மரங்கள் வெட்டி கடத்தல் 2 பேர் கைது


மரங்கள் வெட்டி கடத்தல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2022 10:36 PM IST (Updated: 12 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மரங்கள் வெட்டி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே மரங்கள் வெட்டி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
மரங்கள் வெட்டி கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை- தோட்டிக்குப்பம் சாலையில் மர்ம நபர்கள் சிலர் விலை உயர்ந்த மரங்களை கடத்தி செல்வதாக மாவட்ட வன அதிகாரி கார்த்திகேயினிக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன், வனவர் விஜய முருகன், வனக்காப்பாளர்கள் வெற்றிவேல், ஆறுமுகம் வனக்காவலர் விக்னேஷ் மற்றும் வன சிப்பந்திகள் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அந்த லாரியில் விலை உயர்ந்த ரோஸ் வுட் மரங்கள் இருந்தது தெரியவந்தது. வனத்துறையினரை பார்த்ததும் வாகனத்தில் இருந்த 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர். 2 பேர் வனத்துறையிடம் சிக்கினர்.
2 பேர் கைது
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேன்கனிக்்கோட்டை அருகே உள்ள பென்னங்கூர் கிராமத்தை சேர்ந்த முகமது ரபிக் (வயது 43), மசூத் (25) ஆகிய இருவர் என்பது தெரிய வந்தது. உடனே வனத்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடியவர்கள் வன்னியபுரம் கிராமத்தை சேர்ந்தபச்சையப்பன் (32), தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சுஹேல் (42) என்பதும் தெரியவந்தது.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் வளர்ந்திருந்த விலை உயர்ந்த ஈட்டி வகை ரோஸ் வுட் மரங்களை அனுமதி இல்லாமல் வெட்டி கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3.5 டன் ரோஸ் வுட் மரங்கள், கடத்துக்கு பயன்படுத்தயி லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடியவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story