குளிர்பதன கிடங்குகளில் புளியை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்


குளிர்பதன கிடங்குகளில் புளியை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்
x
தினத்தந்தி 12 May 2022 10:36 PM IST (Updated: 12 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்துக்கு வரத்து அதிகரித்துள்ளதால் குளிர்பதன கிடங்குகளில் புளியை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.

கிருஷ்ணகிரி:-
மாவட்டத்துக்கு வரத்து அதிகரித்துள்ளதால் குளிர்பதன கிடங்குகளில் புளியை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
புளி வரத்து
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கர்நாடகா, ஆந்திரா,சத்திஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புளி வரத்து தொடங்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் புளி விளைச்சலுக்கான நல்ல சீதோஷ்ண நிலை காணப்படுவதால் புளி வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அறுவடை பருவமான தற்போது இயல்பை விட குறைவான விலையில் புளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் புளி விவசாயிகள், சில்லரை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்குகளில் இருப்பு வைக்கலாம்.
180 நாட்களுக்கு...
அதன்படி போச்சம்பள்ளியில் 76 மெட்ரிக் டன்னும், கிருஷ்ணகிரியில் 25 மெட்ரிக் டன்னும், ஓசூரில் 700 மெட்ரிக் டன்னும், ராயக்கோட்டையில் 180 மெட்ரிக் டன்னும், ஆலப்பட்டியில் 25 மெட்ரிக் டன்னும், காமன்ெதாட்டியில் 50 மெட்ரிக் டன்னும், காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டையில் தலா 25 மெட்ரிக் டன்னும் கொள்ளளவு இருப்பு வைக்கலாம்.
எனவே குளிர்பதன கிடங்குகளில் விவசாயிகள் தங்களுடைய புளியை 180 நாட்களுக்கு குவிண்டாலுக்கு மாதம் ரூ.260 வீதம் செலுத்தி இருப்பு வைத்து அதிகபட்ச விலை விற்கும் காலங்களில் விற்பனை செய்து பயன்பெற கேட்டுக்கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) 94864 30927,  ஓசூர் வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) 97900 11471 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story