6 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
6 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பர்கூர்:
கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் பசவண்ணகோவில் - வரட்டனப்பள்ளி சாலையில் சின்னமட்டாறப்பள்ளி என்னும் இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர் 6 கிலோ கஞ்சா எடுத்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவருடைய பெயர் சுரேஷ் (வயது 22), குருவிநாயனப்பள்ளி அருகே நல்லமான்சந்தை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story