உலக செவிலியர் தின விழா


உலக செவிலியர் தின விழா
x
தினத்தந்தி 12 May 2022 10:36 PM IST (Updated: 12 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தின விழா நேற்று நடந்தது. மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவ படத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
நிகழ்ச்சியில் செவிலியர்களின் பணியைப் பாராட்டி கவிதைகள் வாசிக்கப்பட்டன. மேலும் செவிலிய கண்காணிப்பாளர் நிலை 1, நிலை 2, ஆகிய நிலைகளில் பணியாற்றும் செவிலியர்கள் உள்பட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் மருத்துவ கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் செல்வி, ராஜலட்சுமி, தினேஷ், மது, மற்றும் நிர்வாக அலுவலர்கள் சரவணன், வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story