கோடை காலத்தில் குடிநீர் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:-
மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-
அதிக முக்கியத்துவம்
முதல்-அமைச்சர் ஊரக வளர்ச்சித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வீடு வழங்கும் பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் ஊரக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோடை காலங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க அலுவலர்கள் மேற்பார்வையிட வேண்டும்.
அதே போல வீடுகள் கட்டுமான பணிகள், சாலை பணிகள் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் ஒருங்கிணைந்து திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கோ. மலர்விழி, செயற்பொறியாளர் மலர்விழி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story