தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 May 2022 12:00 AM IST (Updated: 12 May 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த மக்கள் குறை தொடர்பான செய்தி வருமாறு:-

சாலை சீரமைக்கப்படுமா? 
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி தேத்தாக்குடி வடக்கு ஊராட்சி ஒன்றியம் வேடன்நகரில் இருந்து தம்பிகவுண்டர் தெருவை இணைக்கும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

                                                                                                                                    -பரமேஸ்வரன், வேதாரண்யம்.

Next Story