ஞானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா


ஞானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா
x
தினத்தந்தி 12 May 2022 10:43 PM IST (Updated: 12 May 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழா, பட்டின பிரவேசம் எனப்படும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி ஆகியவை வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்த விழாவிற்கான தொடக்க நிகழ்ச்சியாக நேற்று தருமபுரம் ஆதீனம,  ஞானபுரீஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 
முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஆதீன கட்டளை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.
22-ந் தேதி பட்டின பிரவேசம்
விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வருகிற 18-ந் தேதி சாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவமும், 20-ந் தேதி தேரோட்டமும், 21-ந் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா செல்லும் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story