புதுப்பேட்டை சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு


புதுப்பேட்டை சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு
x
தினத்தந்தி 12 May 2022 10:49 PM IST (Updated: 12 May 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்களை கலெக்டர் திறந்துவைத்தார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் புதியதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஸ்வாஹா தலைமை தாங்கி புதியதாக கட்டப்பட்ட நுழைவு வாயில், நோயாளிகள் காத்திருப்பு அறை ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

மேலும் அறுவைச் சிகிச்சை பிரிவு கதவு மற்றும் சிமெண்ட் சாலை உள்ளிட்ட வசதிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்டது.

 சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, தலைமை மருத்துவர் பி.சுமதி, அரசு மருத்துவர் சுமன் மற்றும் செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story