ராமேசுவரம் கோவிலில் ரூ.1½ ேகாடி உண்டியல் காணிக்கை
ராமேசுவரம் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.1½ ேகாடி காணிக்கை கிடைத்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரூ.1 கோடியே 62 லட்சத்து 29 ஆயிரத்து 704, தங்கம் 104 கிராம், வெள்ளி 2 கிலோ 835 கிராம், அயல் நாட்டு கரன்சி நோட்டுகள் 210 இருந்தது. உண்டியல் திறப்பின் போது கோவில் துணை ஆணையர் மாரியப்பன், பரமக்குடி உதவி ஆணையர் செல்வி, தக்கார் பிரதிநிதி வீரசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், ஆய்வர் பிரபாகரன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி மற்றும் கோவில் அலுவலர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story