வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது
வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ளவும், பொது வினியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொள்பவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story