நாமக்கல்லில் முதியவர் மயங்கி விழுந்து சாவு யார் அவர்? போலீசார் விசாரணை


நாமக்கல்லில் முதியவர் மயங்கி விழுந்து சாவு யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 May 2022 10:57 PM IST (Updated: 12 May 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் முதியவர் மயங்கி விழுந்து சாவு யார் அவர்? போலீசார் விசாரணை

நாமக்கல்:
நாமக்கல் நரசிம்மசாமி கோவில் எதிரே வணிக வளாகம் உள்ளது. இதன் படிக்கட்டில் அமர்ந்து இருந்த 65 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் காவி நிற வேட்டி அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story