நிதி நிறுவனத்தில் ரூ.65 லட்சம் மோசடி


நிதி நிறுவனத்தில் ரூ.65 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 12 May 2022 10:58 PM IST (Updated: 12 May 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூரில் நிதி நிறுவனத்தில் ரூ.65 லட்சம் மோசடி செய்யப்பட்டது

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் தினசரி சீட்டு கட்டி வந்துள்ளனர்.இதில் முழுமையாக பணம் கட்டிய வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பித் தரவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் சேமிப்பு பணத்தை கேட்க தொடங்கியதால் கடந்த 3 மாதங்களாக நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை. இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். நிதி நிறுவன மோசடி குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முதுகுளத்தூர் வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
முதுகுளத்தூர் நகர் பகுதியில் இந்த நிறுவனம் ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சீட்டு கட்டிய அனைவருக்கும் திரும்ப பணம் வழங்கப்படும் என முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் மோகன் தெரிவித்தார்.
.

Next Story