குப்பம் பொன் காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 12 May 2022 11:34 PM IST (Updated: 12 May 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

12 ஆண்டுகளுக்கு பிறகு குப்பம் பொன் காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.

நொய்யல் 
சித்திரை திருவிழா
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 3-ந்தேதி பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 
10-ந்தேதி அன்று பொங்கல் வைக்கப்பட்டு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பொன்காளியம்மன் முன் படையலிட்டு வடிசோறு, மாவிளக்கு பூஜை நடந்தது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. 
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story