திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 12 May 2022 11:36 PM IST (Updated: 12 May 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கரூர், 
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:- திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்கள் குடியிருப்பதற்கு வீடு, கல்வி தகுதிகேற்ப தனியார் வேலைவாய்ப்பு உருவாக்கிடவும், தனியாகவோ அல்லது குழுவாகவோ சுயதொழில் தொடங்குவதற்கு பயிற்சியுடன் கூடிய வங்கி கடன் உதவியும், மருத்துவ உதவி,அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை இதுபோன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை உருவாக்கி உங்களின் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் கவுரவமாக வாழ மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து உதவிகளையும் செய்திட தயாராக உள்ளது, என்றார். 
முன்னதாக திருநங்கைகளின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story