குற்றத்தடுப்பு பணிக்கு 4 புதிய ரோந்து வாகனங்கள்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 12 May 2022 11:47 PM IST (Updated: 12 May 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் குற்றத்தடுப்பு பணிக்கு 4 புதிய ரோந்து வாகனங்களை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தொடங்கி வைத்தார்.

கரூர்,
ரோந்து வாகனங்கள்
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கரூர் நகர உட்கோட்டத்தில் போலீஸ் நிலையங்களில் குற்றத்தடுப்பு பணி, சட்டம் ஒழுங்கு பணி, வாகன விபத்துகள், நெடுஞ்சாலை குற்றத்தடுப்பு பணி போன்றவற்றில் விரைந்து செயல்படுவதற்காக மேலும் 4 புதிய நான்கு சக்கர ரோந்து வாகனங்களை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மற்றும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 
  இந்த 4 ரோந்து வாகனங்களும் கரூர் டவுன் போலீஸ் நிலைய பகுதிகளிலும், வெங்கமேடு மற்றும் வாங்கல் போலீஸ்நிலைய பகுதிகளிலும், பசுபதிபாளையம் மற்றும் தாந்தோணிமலை போலீஸ்நிலைய பகுதிகளிலும், வெள்ளியணை போலீஸ்நிலைய பகுதிகளிலும் நியமிக்கப்பட்டு ரோந்து பணி மேற்கொள்ளப்பட உள்ளன. 
பேட்டி
பின்னர் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:- ரோந்து போலீசாரை அதிகப்படுத்தும் விதமாகவும், 24 மணி நேரமும், 3 ஷிப்டுகளாக சைரன் மற்றும் ஒளிரும் விளக்குகளுடன் ரோந்து பணி செய்ய ஏதுவாகவும் இந்த ரோந்து வாகனங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 
 விபத்து, அவசர அழைப்பு உள்ளிட்ட எந்தவொரு சம்பவமாக இருந்தாலும் உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்க முடியும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை மாநகரில் எவ்வாறு காவல்துறை ரோந்து வாகனங்கள் இருக்கிறதோ, அதேபோல் கரூர் மாவட்டத்திலும் இன்று (அதாவது நேற்று) ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திருநங்கைகளுக்கான வாழ்வாதார முன்னேற்றத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் வேறுவகையில் செல்லும் போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும். மாவட்ட நிர்வாகமும் அதைதான் நினைக்கிறது. காவல்துறையும் அதற்கு இணக்கமாக இருக்கும்.
நேற்று முன்தினம் நடந்த சம்பவத்திற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகன திருட்டு சம்பங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ, உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பொறிவைத்து பிடிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story