மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
பாப்பம்பாடியில் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. சேவல்களை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மொரப்பூர்:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தா்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், பூ கரகம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னி கரகம் எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். மாரியம்மனுக்கு 80-க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டனர். சிலர் கோவிலில் அங்க பிரதஸ்னம் செய்து நோ்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்து. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story