1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நிறைவு
பெரம்பலூரில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நிறைவடைந்தது. கோடை விடுமுறை விடப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
பெரம்பலூர்,
இறுதி தேர்வு
தமிழகத்தில் தற்போது 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டும், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நேற்றுடன் நிறைவடைந்ததால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் கோடை விடுமுறை கொண்டாடவும் தயாராக உள்ளனர். இதில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 12-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
மாணவ-மாணவிகள் உற்சாகம்
கோடை விடுமுறை ஒரு மாதம் விடப்பட்டதால் நேற்று பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து தங்களது வீடுகளுக்கு சென்றனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 30-ந் தேதி அந்தந்த பள்ளிகள் தெரிவிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்க இருக்கின்றன.
12-ம் வகுப்புக்கு வருகிற 23-ந்தேதியுடனும், 10-ம் வகுப்புக்கு வருகிற 30-ந்தேதியுடனும், 11-ம் வகுப்புக்கு வருகிற 31-ந்தேதியுடனும் அரசு பொதுத்தேர்வு நிறைவடைகிறது.
Related Tags :
Next Story