அ.தி.மு.க. சார்பில் அன்னதானம்
சோளிங்கரில் அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஏ.எல்.சாமி, நகராட்சி 9-வது வார்டு உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன், நகர செயலாளர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் மணிகண்டன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம், இனிப்பும் வழங்கினார். அ.தி.மு.க. நிர்வாகிகள் போளிபபாக்கம் மணி, தேவன், யுவராஜ் சம்பத், ஆதிமூலம், சங்கர், ஜெயச்சந்திரன், வாசு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story