கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 May 2022 11:57 PM IST (Updated: 12 May 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

உடையார்பாளையம், 
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் இடையார் புளியந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். இதில், ஒருவர் தப்பி ஓடினார். விசாரணையில் அவர்கள் இடையார் காலனி தெருவை சேர்ந்த கார்த்தி (வயது 21), சக்தி (20) என்பதும் இவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கார்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சக்தியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story