காளான் வளர்ப்பு தொழில்; கலெக்டர் ஆய்வு
காளான் வளர்ப்பு தொழில்; கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவரங்குளம்:
திருவரங்குளம் அருகே கொத்தகோட்டை ஊராட்சி கல்யாணபுரம் பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் முல்லை அரும்பு மகளிர் சுய உதவிக்குழுவினர் காளான் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கால்நடை வளர்ப்பு, ஆடு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்தது. அதில் பயிற்சி பெற்ற கொத்தகோட்டை முல்லை அரும்பு மகளிர் குழுவினர் காளான் வளர்ப்பு தொழிலை அரசின் ஒத்துழைப்போடு விரிவுப்படுத்தி செய்து வருகின்றனர். இக்குழுவினர் செய்து வரும் இந்த தொழிலை மாவட்ட கலெக்டர் கவிதாராமு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காளான் வளர்ப்பு தொழில் நுட்பங்கள், காளான் வளர்ப்பு தொழில் லாபகரமாக உள்ளதா என்பது பற்றி குழு உறுப்பினர்களிடம் நேரில் விசாரித்து காளான் உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் பற்றி கேட்டறிந்தார். இதில் வேளாண்மை துறை துணை இயக்குனர் பெரியசாமி, திருவள்ளூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story