அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்


அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 13 May 2022 12:16 AM IST (Updated: 13 May 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புவனகிரி

புவனகிரி அருகே அழிச்சிக்குடி கிராமத்தில் உள்ள வடக்குத்தெரு மக்கள் சுடுகாடு செல்வதற்கு பாதை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல பாதை வசதி இல்லாததால், நிரந்தர பாதை வசதி கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கிராம மக்கள் ஒன்று திரண்டனர்.

இதுபற்றி அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது அவர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் இன்னும் இரண்டு வாரங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீ்ட்டு சுடுகாட்டிற்கு நிரந்தர பாதை வசதி செய்து தரப்படும் என்றனர்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story