நெல்லை ஷிபா மருத்துவமனையில் செவிலியர் தின கொண்டாட்டம்
நெல்லை ஷிபா மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
நெல்லை:
நெல்லை ஷிபா மருத்துமனையில் உலக செவிலியர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஷிபா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகம்மது ஷாபி தலைமை தாங்கினார். மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் முகம்மது அரபாத் முன்னிலை வகித்தார். நெல்லை மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜான் பிரிட்டோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செவிலியர் தின சிறப்பு செய்தி வழங்கினார்.
ஷிபா மருத்துவமனையின் முன்னாள் தலைமை செவிலியர் இந்திரா ஸ்டீவென்சன் கலந்துகொண்டு செவிலியர் தின வாழ்த்து செய்தி வழங்கினார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவர் ஷியாவுல்லா, செவிலியர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தினார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செவிலியர்களுக்கான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் ஜெமிமா நன்றி கூறினார்.
விழாவில் மருத்துவர்கள் கனி, தாரா ரஞ்சன், ராஜ்குமார், சரண்யா, மேலாளர் சுதர்சன், களப்பணியாளர்கள் ஆண்ட்ரூ, ஜானகிராமன், வீரக்குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story