அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் இன்று தேரோட்டம்; திருச்சி சரக டி.ஐ.ஐி. நேரில் ஆய்வு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 13 May 2022 12:22 AM IST (Updated: 13 May 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி சரக டி.ஐ.ஐி. நேரில் ஆய்வு

குளித்தலை, 
குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் நேற்று அய்யர்மலை பகுதிக்கு வந்த திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் திருவிழா தேரோட்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டார். போலீசார் எவ்வகையிலான பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள் என்பது குறித்து கேட்டறிந்தார். 
மேலும் தேர் செல்லும் பகுதியில் மின்கம்பி தொடர்பான இடர்பாடுகள் எதுவும் உள்ளதா என்பது குறித்து பார்வையிட்டு திருவிழாவையொட்டி உரிய பாதுகாப்பு செய்யவேண்டுமென போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த ஆய்வில் குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் உடன் இருந்தனர்.

Next Story